Sunday, June 13, 2010

நீண்ட நேர தூக்கமும் உடல் நலம்கெடும்

நீண்ட நேர தூக்கமும் உடல் நலம்கெடும் என்று ஒரு நாளிதழில் படித்தேன். அது உண்மையும் கூட. நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்ககூடாது ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை தரும்.  அதே நேரம் அது உங்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சக்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களை கொடுக்கும்.

எட்டு மணி நேர உறக்கம் என்பதும் இரவு ஒன்பது மணியில் இருந்து காலை ஐந்து மணி வரை அல்லது பத்து மணிமுதல் காலை ஆறு மணிவரை இருக்கலாம்.  காலை எழுந்தவுடன் சிறிது தூரம் நடப்பது நல்லது.  அதேபோல உங்களின் உணவு முறையும் சற்றே மாற்றப்படவேண்டும்.

காலை எழுந்தவுடன் பெரும்பாலானவர்கள் தேநீரும் காபியும் குடிக்கிறீர்கள் அதை முற்றிலும் ஒதுக்குவது உடலுக்கு மிக நல்லது.  அதேபோல காலை சிற்றுண்டியும் வெகுவாக குறைப்பது நல்லது ஏனென்றால் பெரும்பாலானவர்கள் அதிக எண்ணெய் உபயோகம் குறைக்கப்படவேண்டும்.  இட்லி மிளகாய்பொடி, தேங்காய்சட்னி மற்றும் ஊறுகாய் இவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

கலோரிகள் நமது உடலை வழி நடத்தும் ஒரு எரிசக்தி.  எரிசக்தி என்பது நாம் எடுத்துகொள்ளும் உணவை பொருத்து நம் உடலின் எரிசக்தி மாறுபடும்.  நாம் அளவுக்கதிகமான எரிசக்தி நமது உடலில் சேகரம் ஆகும்.  உங்கள் சமையலில் எண்ணையை குறைப்பது உடலில் எரிசக்தியும் கொழுப்பும் சேருவதை தடுக்கும்.

உங்களின் உடலின் எடைக்கும் உயத்திற்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது. ஆகவே நாம் மிக கவனமாக உணவை உடலுக்கு தர நாம் மிக அருமையான உடலமைப்பை பெற முடியும்.  உதாரணமாக உங்கள் உயரம் 163 செ.மீ இருந்தால் உங்களின் எடை 63 கிலோவே இருக்கவேண்டும் அதற்கு அதிகமாக இருந்தால் அது இதயத்திற்கு நல்லதில்லை.  அதேபோல் உங்களுக்கு சக்கரை நோய் இருந்தாலும் உங்கள் உடல் எடை பாதிப்பைத்தரும். 

அதேபோல நமது அன்றாட பழக்க வழக்கத்திற்கும் நமது வாழ்நாளுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நாம் அறியவேண்டும். இதுபோல் சிறுசிறு குறிப்புகளை தினமும் நீங்கள் இங்கே காணலாம். 

உடல் எடை குறைய ஹீர்பாளைப் உணவை எடுத்துகொள்ளுங்கள் : http://herbalife.choblogs.com 

தமிழ்ச்சுவை

தமிழ்ச்சுவை என்பது தமிழில் உரையாடலின் சுவையும் மக்களுக்கான பயனுள்ள செய்திகளையும் இங்கே தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  நானும் எனது முயற்சிகளும் வெற்றிபெற இறைவனை வணங்கி இந்த சிறுவலையகம் எல்லா தமிழ் நெஞ்செங்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கோடு எழுதஉள்ளேன். 

எனக்கும் தமிழுக்கும் இருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடர்கிறது.  இதை தொடர்ந்து செய்ய என்னுடைய நேரத்தை செலவிட இருக்கிறேன்.  என்றென்றும் நட்ரியுடன் கை.க.சோழன்.